திருவனந்தபுரம்:
கேரளத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் ஹாட்ஸ்பாட்டாக காசர்கோடு பகுதி இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இன்று செய்தியளார்களிடம்பேசிய முதல்வர் பினராயி விஜயன், 24 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார், இதன் காரணமாக கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், பாலக்காட்டில் ஒருவர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 265 பேரில், 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். 191 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள் என்றும், . 67 பேருக்கு நோய்த் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததால் பரவியதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததுள்ளது. கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக அந்த மாவட்டம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 128 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதில் 90 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது அந்த மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், காசர்கோடு மாவட்டம் சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு மூத்த ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.
காசர்கோடு மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படு, அங்கு ‘கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் குறைந்தது 8000 பேர் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது.