ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. இந்தியாவின் மக்கள்தொகை 2061 ஆம் ஆண்டில் உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் மக்கள்தொகை ஏற்கனவே உச்சத்தைத் தொட்டுவிட்டது.
சீன அரசு ஜனவரி 19 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு சீனாவுக்கு மக்கள்தொகை குறைவின் தொடர்ச்சியான நான்காவது ஆண்டாகும். இதற்குக் காரணம், சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துவிட்டது என்பதுதான்.

இந்த நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையும், இந்தியாவின் கணிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, சீனாவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை ஒன்றாக சேர்த்தால், அது சீனாவின் 1.41 பில்லியன் மக்கள்தொகையில் வெறும் 26 சதவீதம் மட்டுமே. இருந்தாலும், இந்த இரண்டு மாநிலங்களில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவை மிஞ்சுவது குறிப்பிடத்தக்கது.
இந்த புள்ளிவிவரங்கள், இந்தியா–சீனா மக்கள்தொகை போக்குகளில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
[youtube-feed feed=1]