டில்லி : ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டில் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டில்லியில் செய்தியாளரிடம் பேசிய அவர், “இந்தியாவில்  சுமார் ஒரு லட்சம் பேர் முறைகேடாக தங்களின் வங்கிக் கணக்கில் ரூ.1.72 லட்சம் கோடியை டிபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 91 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக வருமான வரி கட்ட ஆரம்பித்துள்ளனர்.

கறுப்பு பணம் பதுங்குவோர், முறையாக வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக அரசு அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முறையாக வரி செலுத்துபவர்கள் இது பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

வருமான வரித்துறை துவக்கிய உள்ள முதல்கட்ட ஆய்வு மற்றும் தேடுதல் வேட்டையில் ரூ.16,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கையில் அதிக அளவிலான பணத்தை வைத்திருப்பது ஆபத்து என பணக்காரர்கள் இப்போது  உணர்ந்துள்ளனர்.

தற்போது ஒருநாளைக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவிட பான் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்பில் 30 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அடுத்த இரண்டு வருடங்களில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று ஜெட்லி  தெரிவித்துள்ளா