டெல்லி:

ந்த ஆண்டு வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெங்காய விநியோகஸ் தர்களுக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இங்களில் ரெயடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக வடமாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக  வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

தற்போது  மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.60 முதல் 90 வரை, ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து விளைவிக்கப்பட்டு வருகிறது. இது போதாத காரணத்தினால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களி லிருந்து தமிழ்நாடு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

வடமாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு விளைவிக்கப்பட்ட ஏராளமான வெங்காய வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி விட்டன. இதன் காரணமாக வெங்காயத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வெங்காயத் தட்டுப்பாட்டுப் போக்கை சுமார் 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசின் ஏஜென்சி எம்எம்டிசி முடிவு செய்துள்ளது. அதுதொடர்பாக கடந்  7 ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது.

இவை இன்னும் முடிவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்ய பல வாரங்கள் ஆகலாம். இநத்  நிலையில், வெங்காய வியாபாரிகள் தங்களிடம் உள்ள வெங்காயங்களை இருப்பு வைப்பதற்காக பதுக்கி வைப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில், வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.