சென்னை: சென்னையில் 10 இடங்களில் உள்பட மாநிலம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மண்ணடி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த பிரபல நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முறையாக கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.