கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு தினங்களுக்கு முன் ஒட்டப்பட்ட ‘பே-சிஎம்’ போஸ்டர் நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆளும் பாஜக அரசு மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஊழலில் திளைத்து வருவதாகவும் அனைத்து ஒப்பந்தங்களும் 40 சதம் கமிஷன் வாங்குவதாகவும் கடந்த பல மாதங்களாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இது தொடர்பாக பசவராஜ் பொம்மை மீது மத்திய அரசோ அல்லது பாஜக தலைமையோ எந்த ஒரு விசாரணையோ அல்லது நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனம், உதவி பேராசியர்கள் பணி நியமனம், பொறியாளர்கள் நியமனம் என்று அரசு துறையில் ஊழியர்களை நியமிக்க ஊழல் நடந்து வருவதாக ஆதாரபூர்வமாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்த நிலையில், பொம்மை மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து பெங்களூரில் ஒட்டப்பட்ட ‘பே-சிஎம்’ போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலவர், ஆளுநர் உள்ளிட்டவர்கள் மீது இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்திருந்தது.

கர்நாடக அரசின் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் இதன் அடுத்தகட்டமாக பொம்மை அரசு எந்தெந்த ஊழலில் எவ்வளவு பணம் பெற்றது என்பதை குறிக்கும் பேமென்ட் ‘ஸ்க்ரீன்-ஷாட்’ போஸ்டர்களை கர்நாடக காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.