மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், சட்டமன்ற சபாநாயகர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற சபாநாயகர் பதவி: காங்கிரஸ் எம்எம்ஏ நானா படோலி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. தற்போதைய நிலையில், மூத்த எம்எல்ஏவான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வாலேஸ் பாட்டீல், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான பாலாசாஹேப் தோரட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான நானா படோலி, சட்டப்பேரவைத் தலைவராக போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நானா படோலி சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.