லக்னோ:

உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. முக்கியமான விளையாட்டுப் பொருள் உற்பத்தி துறை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது.


சத்தீஸ்கர், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஃபர்ஸ்போஸ்ட் இணையம் கள ஆய்வு நடத்தியது.

குறிப்பாக உத்திரப் பிரதேச மாநிலத்தில்தான் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் பந்து தயாரிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள் இன்று வேலையிழந்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத் ஆரம்பத்தில் நன்றாகத்தான் செயல்பட்டார். போகப் போக மோசமாகிவிட்டார்.
தொழில் நலிந்துபோனதால் தெற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடை செய்தார். இதனால் மீரட் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

இறைச்சி வியாபாரத்தையே நம்பியிருந்த இவர்களது வாழ்க்கை நிர்மூலமானது. சட்டப்பூர்வமாக தொழில் செய்தாலும், பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் 9.6% உள்ளது. தேசிய அளவிலான விகிதம் 6.8% என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் நசிந்து போயின. விளையாட்டு உற்பத்தி பொருட்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பால், இந்த தொழில் முற்றிலும் முடங்கி, பலர் வேலையிழந்துள்ளனர்.