க்னோ

த்தரப்பிரதேச மாநில இடைத் தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது.  ஆயினும் வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தின் படி இதற்கு முந்தைய தேர்தல்களை விட பாஜக குறைவாகப் பெற்றுள்ளது.   பாஜக விடம் இருந்து 7.53% வாக்குகள் குறைந்து அவை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பங்காரமாவ் தொகுதியில் ஆர்த்தி பஜ்பாய் மற்றும் கடம்பூர் தொகுதியில் கிருபா சங்கர் ஆகியோர் இரண்டாம் இடத்தில் வந்துள்ளனர்.   எனவே 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசோக் சிங், “சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கட்சிக்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை.  ஆயினும் காங்கிரஸுக்கு மாநிலத்தில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.  நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியை இரு தொகுதிகளில் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.