கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை,  இதன்மூலம்  ‘தற்கொலைகளின் தலைநகரமாக  தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய கவர்னர் ரவி,   ”தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,” என கூறினார்.

சென்னை தென்னிந்திய ஆய்வுகள் மையத்துடன் இணைந்து கோயம்புத்தூரில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்த சரஸ்வதி-சிந்து நாகரிகம் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், ‘சிந்து சரஸ்வதி நாகரிகம், சிந்து நதி முதல் தாமிரபரணி வரை நாகரிகத்தின் நோக்கும், போக்கும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.  இதில் கவர்னர் ரவி உள்பட பல்வேறு தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கவர்னர் ரவி,  இந்திய நாகரிகம் மிகவும் பழமையானது. இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைகள், கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட தொன்மையான இந்திய அறிவு மரபை கண்டறிந்து, மொழி பெயர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டின. மொழி, மண்டலம் உள்ளிட்டவைகளில் நாம் வேறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம் நாட்டின் தத்துவம்.

அந்த உயரிய நாகரிகத்தின் பௌதீக வெளிப்பாடுகள், புவியியல் மற்றும் தட்பவெப்ப சக்திகளால் அழிந்துவிட்ட போதிலும், புனிதமான சரஸ்வதி நதிக்கரையில் வேதங்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட முழு மனிதகுல படைப்பின் ஒருங்கிணைந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அனைத்தையும் உள்ளடக்கிய ஞானமும் வாழ்க்கை தத்துவமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளது என்றும், இன்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த தனித்துவமான தத்துவமும் வாழ்க்கை முறையும் மொழிகள், பிராந்தியங்கள், பழக்கவழக்கங்கள், உணவு வகைகள் உள்பட அனைத்து பன்முகத்தன்மைகளையும் தழுவி உள்வாங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரதம், வெளிநாட்டு நாகரிக அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதெல்லாம், சங்க காலம் முதல் தமிழ்நாட்டின் கவிஞர்களும் சித்தர்களும் இந்த வேத ஞானத்தை எவ்வாறு பாதுகாத்து வளர்த்தெடுத்தனர் என்பதையும் அவர் விளக்கினார்.

சரஸ்வதி நதி குறித்து ரிக் வேதம் குறிப்பிடுகிறது. சரஸ்வதி நதி குறித்த செய்திகள் வெறும் புராணமல்ல; அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று தான் என்பது நம் வேதங்களின் அடிப்படை. ஆனால், இன்று மனிதர்கள் மன அழுத்தத்தாலும், பல்வேறு முரண்பாடுகளாலும் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

பிரதமர்  மோடியின் ஆட்சிக் கொள்கைகளும் திட்டங்களும் சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் காலத்தால் அழியாத ஞானத்தின் கொண்டாட்டங்களாகவும், ஒரு புதிய, மீண்டெழும் இந்தியாவை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும், அவை ஒரு நிலையான உலக ஒழுங்குக்கு எவ்வாறு வழிவகுப்பதாக அமைகின் றன என்பதையும் விளக்கினார்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணத்தில் தகவல் உள்ளது. ஆண்டுதோறும், 20,000 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

[youtube-feed feed=1]