இலங்கையில் தமிழர்களின் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதாக எழுத்தாளர் சாத்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
“இலங்கையில் வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நான் எழுதிய புத்தகங்களான ஆயுத எழுத்து, அன்று சிந்திய ரத்தம், மற்றும் அண்மையில் வெளியான அவலங்கள் சிறுகதை தொகுப்பு அடங்கிய புத்தக பொதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
சரியான காரணங்கள் எதுவுமின்றி அதனை இலங்கை சுங்கத் துறையினர் உரியவரிடம் கொடுக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்களுக்கு வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்படுவதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது” – இவ்வாறு எழுத்தாளர் சாத்திரி தெரிவித்துள்ளார்.