மத்திய அரசின் நோட்டுத்தடை மற்றும் அரசியல் வன்முறையை எதிர்த்து தாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளதாக 40 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு உள்ளூர் தலைவர் அறிவித்துள்ளார்.

rss3

கேரள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை அமைப்பான இந்து ஐக்கிய வேதியில் மாநில செயலராக இருந்த பி.பத்மகுமார் என்பவர் பாஜக-ஆர்.எஸ்.எஸின் நோட்டு தடை நடவடிக்கையால் மனம் வெறுத்து தாம் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
பாஜக-ஆர்.எஸ்.எஸின் மனித நேயமற்ற அரசியல் வன்முறைகளால் அநாதைகள் ஆக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம் என்றும் அதனால் தாம் ஏற்கனவே கொதித்துப் போயிருந்ததாகவும், நோட்டுத்தடை நடவடிக்கையின் விளைவுகளைப் பார்த்தவுடனே வெறுத்துப்போய் மொத்தமாக வெளியேற தீர்மானித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அனவூர் நாகப்பனுடன் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார்.