பழனி
பராமரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் பழனிமலையில் ஓரிரு நாட்களில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்க உள்ளது.
கடந்த மாதம் 7 ஆம் தேதி பழனி ரோப்கார் நிலையத்தில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி தொடங்கியதையொட்டி கம்பி வடம், பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு ‘சாப்ட்’கள் தேய்மானம் அடைந்ததால் கடந்த 5-ந்தேதி புதிய ‘சாப்ட்’ பொருத்தப்பட்டது.
கடந்த 9-ந்தேதி ரோப்காரில் புதிய கம்பிவடம் பொருத்தும் பணி நடந்தது. நேற்று ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தும் பணி நடைபெற்றது. முன்னதாக பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு கம்பிவடத்துடன் பொருத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் ஓரிரு நாட்களில் சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இதுபற்றி,
“ரோப்கார் பராமரிப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது. அதாவது ரோப் பெட்டிகள் நேற்று பொருத்தப்பட்டது. அதையடுத்து பெட்டிகளில் பஞ்சாமிர்தம் வைத்து இயக்கி சோதனை செய்யப்படும். இறுதியாக சோதனை ஓட்டம் நடைபெறும். அது முடிந்தவுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் சேவை தொடங்கும்”
என அறிவித்துள்ளனர்.