டெல்லி:
காஷ்மீர் எல்லைக்கோடு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயர் அதிகாரி ரன்பீர் சிங் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 20 க்கும் மேற்ப்பட்ட முறையில் இந்திய எல்லையை ஊடுருவ முயன்றனர். அதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்திய உளவு துறை அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் அதிரடியாக புகுந்த அங்குள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது பயங்கர தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்ததாகவும் , எந்த சூழ்நிலைகளையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சேர்ந்த் 5 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், நள்ளிரவு 12.30 மணியில் இருந்து 4.40 மணிக்குள் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலால் பயங்கரவாதிகள் முகாம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், இந்த தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றார்.
இதுபோன்ற தாக்குதல் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், ஆனால், பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபட கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அதிகாலையில்,காஷ்மீர் எல்லை பகுதியான உரி ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.