நியூயார்க்
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை விட பிடன் 14% முன்னணியில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இரு கட்சி வேட்பாளர்கள் மட்டுமே முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். அவை ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகள் ஆகும். இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோசப் ஆர் பிடன் ஜூனியர் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலையொட்டி பிரபல செய்தி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் அற்றும் சியன்னா கல்லூரி இணைந்து ஒரு கருத்துக் கணிப்பு தேர்ஹலை நடத்தி உள்ளது. இந்த தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக 36% மற்றும் பிடனுக்கு ஆதரவாக 50% பேர் வாக்களித்துளனர். தற்போதைய கணக்குப்படி டிர்மப் 14% பின்னடைவில் உள்ளார்.
இதற்கு கொரோனா தாக்கத்தில் டிரம்ப் நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கு எற்படுத்திய அதிருப்தி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் டிர்மப்புக்கு அவருடைய பதவிக்காலத்தில் அவர் எடுத்த பல நடவடிக்கைகள் அவருடைய புகழை குறைக்கும் வண்ணம் அமைந்திருந்தன. தற்போது ஒரு கொள்ளை நோய் பரவுதலை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டதால் இந்த ஆட்சி மீது மேல் மக்களுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிடனுக்கு கருப்பின மக்கள் ஆதரவு, பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இது சென்ற முறை ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப்புக்கு இருந்த ஆதரவைப் போ உளது. அதே வேளையில் டிரம்புக்கு வெள்ளையர்கள் மற்றும் நடுத்தர மற்றும் வயதானோர், ஆண்கள் ஆகியோரின் வாக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது.