பெரும்பாவூர்:

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவரது கண்ணீர் கதையை கேட்போம்…

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதின் ஷேக். 7 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். சம்பளம் நிறைய தருகிறார்கள் என்று அவர் நண்பர்கள் சொன்னது உண்மையாகத்தான் இருந்தது.

கொத்தனார் வேலை செய்து வந்தார். மாதம் ரூ.22 ஆயிரம் சம்பாதித்து, ரூ.15 ஆயிரத்தை வீட்டுக்கு அனுப்பி வந்தார்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவர் வாழ்க்கையை, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8&ம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி-யும் புரட்டிப் போட்டன.

இதனால், சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இது குறித்து மேற்கு வங்க தொழிலாளி ஜலாலுதீன் கூறும்போது, “முன்பெல்லாம் எனக்கு தினமும் வேலை கிடைக்கும். இப்பேகாது வாரத்தில் 4 நாட்கள் வேலை கிடைத்தாலே அதிகம்” என்கிறார்.

கேரளாவில் நில பரிவர்த்தனையும் 60% குறைந்துவிட்டது. இதன் பாதிப்புக்கு சாட்சியாக முக்கிய மார்க்கெட்கள் உள்ளன. கூட்டம் அலைமோதிய இந்த மார்கெட்களில் வெறிச்சோடிக் கிடக்கிறது என்கின்றனர் சிறு வியாபாரிகள்.