டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,595 ஆக உயர்ந்து 1,58,892 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,437 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,09,595 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 130 அதிகரித்து மொத்தம் 1,58,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 20,186 பேர் குணமாகி  இதுவரை 1,10,25,631 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,20,401 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 15,051 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,29,464 ஆகி உள்ளது  நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,909 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,671 பேர் குணமடைந்து மொத்தம் 21,44,743 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,30,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,054 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,92,325 ஆகி உள்ளது.  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,408 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,463 பேர் குணமடைந்து மொத்தம் 10,60,560 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,054 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 932 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,61,204 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 429 பேர் குணமடைந்து மொத்தம் 9,39,928 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 147 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,92,008 ஆகி உள்ளது.   நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,185 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 103 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,380 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 836 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,60,562 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,551 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 553 பேர் குணமடைந்து மொத்தம் 8,42,862 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர்.