டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,05,220 ஆக உயர்ந்து 17,848  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 19,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 6,05,220 ஆகி உள்ளது.  நேற்று 438 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 17,848 ஆகி உள்ளது.  நேற்று 12,057 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,59,896 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,27,410 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 5,537 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,80,298 ஆகி உள்ளது  நேற்று 198 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,053 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,243 பேர் குணமடைந்து மொத்தம் 93,154  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,881 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 94,049 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1264 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,852 பேர் குணமடைந்து மொத்தம் 52,926 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 89,802 ஆகி உள்ளது  இதில் நேற்று 61 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,803 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,644 பேர் குணமடைந்து மொத்தம் 59,992 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 676 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,318 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,869 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 368 பேர் குணமடைந்து மொத்தம் 20,038 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 564 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,056 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 718 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 545 பேர் குணமடைந்து மொத்தம் 16,629 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.