டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 8821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,07,191 ஆகி உள்ளது. நேற்று 221 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5829 ஆகி உள்ளது. நேற்று 4531 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,285 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,066 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2287 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 72,300 ஆகி உள்ளது நேற்று 103 பேர் உயிர் இழந்து மொத்தம் 2465 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1225 பேர் குணமடைந்து மொத்தம் 31,333 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,586 ஆகி உள்ளது இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 200 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 536 பேர் குணமடைந்து மொத்தம் 13706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1298 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,132 ஆகி உள்ளது. நேற்று 33 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 556 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 497 பேர் குணமடைந்து மொத்தம் 9243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 415 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,632 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 1092 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1134 பேர் குணமடைந்து மொத்தம் 11,894 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 273 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,373 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 203 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 222 பேர் குணமடைந்து மொத்தம் 6435 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.