ஜெனிவா

ரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை மாறுதலால் கடும் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச நிபுணர் குழு எச்சரித்துள்  ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பல பாதிப்புக்களைச் சந்தித்து வருகிறது குறிப்பாக வெப்பநிலை அதிகரிப்பால் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன.  ஆசியாவில் உள்ள நாடுகளில் முன்பை விட மழை மற்றும் புயல் அதிகரித்துள்ளது.  தற்போது பருவநிலை மாற்றங்களுக்கான சர்வதேச அரசுகளின் குழுவான ஐ பி சி சி தனது ஆய்வு முடிவை இன்று ஜெனிவாவில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மனிதர்களின் செயலால் வருங்காலத்தில் புவி எதிர்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து அச்சமூட்டும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில்  இந்தியாவை குறித்து ”கடந்த 1850-1900 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது வெப்பநிலை அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் குளிரின் தீவிரம் குறைந்துள்ள அதேவேளையில், வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது.

இந்நிலை வரும் தசபங்களிலும் தொடரும்.  ஆசியாவின் பெரும்பகுதியில் சராசரி மற்றும் அதிக மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் வறட்சிகளும் இந்தியத் துணைக் கண்டனத்தில் ஏற்படக்கூடும்.” என கூறப்பட்டுள்ளது.

வெப்ப மயமாதல் மனிதர்களின் செயலால் தான் அதிகரித்துள்ளது என்பது தற்போது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குநரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான  டாக்டர் ஃப்ரைடெரிக் ஓட்டோ கூறியுள்ளார்.  அனல் காற்று,  அதீத மழை, பஞ்சம் ஆகியவற்றை நாம் பார்த்து வருகிறோம். இதில் சில மாற்றங்களை நம்மால் சரி செய்ய முடியாது. வெப்பநிலையை1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தினாலும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களை நாம் பார்க்கத்தான் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,  ”இந்து குஷ் இமயமலையில்பனிப்பாறைகளில் ஏற்படும் பாதிப்புகடல் மட்டம் உயர்வுபுயல்களால் ஏற்படும்  வெள்ளப்  பாதிப்புசீரற்ற பருவமழைகடுமையான வெப்ப அழுத்தம் ஆகியவை சமீப காலத்தில் இந்தியாவைப் பாதிக்கக்கூடும் வெப்ப  மயமாதல்அதீத மழை  காரணமாகப் பனி ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் அதிகரிக்கும்   தவிர  அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல்  பூமியின் சராசரியை விட வேகமாக வெப்பமாகி  வருகிறது  எனவே,  கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது”  என  எச்சரிக்கப்பட்டுள்ளது.