க்ரைன்

நேற்றைய முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடும் பதட்டம் நிலவி வந்தது.   உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன.   ஆயினும் நேற்று உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போரைத் தொடங்கியது.

இந்த போரில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது.  உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி உள்ளது.  இதனால் அங்கு ராணுவத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  பலரும் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி நேற்றைய முதல் நாள் போரில் 137 பேர் மரணம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.  மேலும் ரஷ்யப்படைகளைந் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் அளித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கின் நகரில் வசிக்கும் மக்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் 10000 தானியங்கி துப்பாக்கிகளை விநியோகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  அந்நாட்டைச் சேர்ந்த 18-60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.