புதுடெல்லி: இந்தியாவின் 130 கோடி மக்களில், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில், பாதிபேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பர் என்று ஃபெடரல் அரசாங்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், இந்தியாவில் 7.55 மில்லியன் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இரண்டாவது பெரிய எண்ணிக்கையாகும் உலகளவில்.
அதேசமயம், இன்னொருபுறத்தில் பார்த்தால், வெளிவரும் தகவல்களின்படி, கடந்த செப்டம்பர் மத்தியில் இருந்த உச்சகட்ட கொரோனா தாக்கத்திற்குப் பிறகு, அதன்பிறகான நாட்களில் தாக்கம் குறைந்தே வருகிறது.
ஏனெனில், செப்டம்பர் மாத மத்தியில், நாள் ஒன்றுக்கு 61390 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த அமைப்பின் கூற்றுப்படி, “தற்போதைய நிலையில், இந்தியாவின் 30% மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பர். அந்த அளவு, அடுத்தாண்டு பிப்ரவரியில் 50% என்ற அளவிற்கு உயரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினுடைய கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபர்களே இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றனர். அதாவது, பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டும் கண்டறியப்படாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேவையான சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியவில்லை என்றால், நிலை வரும் நாட்களில் மோசமாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.