சென்னை: சென்னையில், ரயில் தண்டவாளத்தை, அதற்கு உரிய இடங்களில் கடக்காமல், இடையே கடந்ததாக 8 மாதங்களில் 944 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி ரயில்வே தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு 228 பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

 நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்​களில் ரயில் தண்​ட​வாளத்தை அத்​து​மீறி கடக்க முயன்​றது தொடர்​பாக, 944 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிடம் இருந்து ரூ.4.45 லட்​சம் அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது என  சென்னை ரயில்வே கோட்​டம் தெரிவித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்​டம் தமிழகத்​தின் வடமாவட்​டங்​கள் மற்​றும் தெற்கு ஆந்​திரா வரை ரயில்வே எல்​லை​யாக​வும், மொத்​தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதை​யாக​வும் உள்​ளது. சென்னை கோட்டத்த்தில் மட்டும், அதாவத,  சென்​னை​யில், கடற்​கரை – தாம்​பரம் – செங்​கல்​பட்​டு, சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் மற்​றும் கும்​மிடிப்​பூண்​டி, கடற்​கரை – வேளச்​சேரி ஆகிய பிர​தான வழித் தடங்​களில், தின​மும் 630-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களின் சேவை​ இயக்​கப்​படு​கின்​றது. இதுத​விர, 150-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

ரயில் போக்​கு​வரத்து அதி​கம் உள்ள இவ்​வழித் தடங்​களில், தண்​ட​வாளத்தை கடக்​கும் நபர்​கள் சிலர் அவ்​வப்​போது ரயி​லில் அடிபட்டு இறக்​கும் சம்​பவம் நடை​பெறுகிறது. இதன் காரணமாக,  ரயில் தண்​ட​வாளத்​தில் அத்​து​மீறி நுழைந்​து, கடக்க முயல்வது போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளது.  தண்டவாளங்களை கடக்க மேம்பாலங்கள் அல்லது, அதற்கு உரிய இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், பயணகள் சில அவசர   காரணங்​களால்,  விதிகளை மீறி  ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இதன் காரணமாக பலர் ரயிலில் அடிபட்டு இறந்துபோகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.    முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்​களில் ரயி​லில் அடிப்​பட்டு 228 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 34 பேர் காயமடைந்​துள்​ளனர். இதை தடுக்கவே ரயில் தண்டவாளங்களை கடந்து செவ்பவர்களை ரயில்வே காவல்துறை கைது செய்து வருகிறது.

இந்த நிலையில், நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சென்னை கோட்​டத்​தில் ரயில் தண்​ட​வாளத்​தில் அத்து​மீறி நுழைந்​து, கடக்க முயன்ற 944 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​கள் மீது, வழக்கு தொடரப்​பட்​டு, ரூ.4 லட்​சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணி​கள் மற்​றும் பொது​மக்​களும் ரயில் தண்​ட​வாளங்​களைக் கடப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும். ஒரு நொடி கவனக் குறைவு​கூட ஈடு​செய்ய முடி​யாத சோகத்தை ஏற்​படுத்​தக் கூடும். பொது​மக்​கள் தங்​கள் அன்​புக்​குரிய​வர்​களின் பாது​காப்​புக்​காக நடைமேம்​பாலங்​கள், லெவல் கிராசிங்​கு​கள், சுரங்​கப் பாதைகளை மட்​டுமே பயன்​படுத்​த வேண்​டும்​ என அவர்​கள்​ தெரி​வித்​தனர்.