டில்லி:

ங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் இன்று சிபிஐ அதிரடி ரெய்டில் ஈடுபட்டு உள்ளது.  30 வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2ந்தேதி நாடு முழுவதும், 12 மாநிலங்களில், 18 நகரங்களில் 50 இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், இன்று  19 மாநிலங்களின் 110 இடங்களில் திடீர் ரெய்டு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற ரெய்டு மற்றும் 13 நிறுவனங்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையின்போது,  ரூ.1,139 கோடி அளவிற்கு வங்கி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.  இதையடுத்து சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா மற்றும் உயர் அதிகாரிகள் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் மதுரை உள்பட  நாடு முழுவதும் மிகப்பெரிய ரெய்டை சிபிஐ இன்று தொடங்கி யுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களைச் சேர்ந்த 110 இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு  இருப்பதாக கூறி உள்ளது.