ப்லாங்

டந்த ஒன்றாம் தேதி அசாமில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 90 பேர் உள்ள வாக்குச் சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.  இதில் கடந்த 1ஆம் தேதி அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 39 தொகுதிகளில் நடந்தது.  இதில் திம ஹாசோ மாவட்டத்தில் உள்ள ஹாப்லாங் தொகுதியும் ஒன்றாகும்.

இந்த தொகுதிக்குட்பட்ட ஹோட்லிர் எல்பி பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இந்த வாக்குக சாவடியில் மொத்தம் 90 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டி இருந்தது.  ஆனால் இங்கு 171 பேர் வாக்களித்துள்ளனர்.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணை செய்ததில் அந்த பகுதி கிராமத் தலைவர் அரசின் வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  மேலும் அவர் தன்னிடம் உள்ள பட்டியலை அளித்து அதன்படி 171 வாக்காளர்களை வாக்களிக்க வைத்துள்ளார்.

இதையொட்டி தேர்தல் ஆணையம் 4 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது.