ராஞ்சி:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை குற்றவாளி என்று அறிவித்து செய்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஊழல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், தற்போது 3வது வழக்கில் வரும் 24ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ராஞ்சி கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 1991-94 வரையிலான காலகட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது இந்த முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும் பல முறைகேடு புகார்கள் லாலு மற்றும் அவரது அமைச்சரவை மீது கூறப்பட்டது.
இது சம்பந்தமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 2 வழக்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் மாட்டுத்தீவனம் முறைகேடு வழக்கில் லாலுபிரசாத் குற்றவாளி என்று ராஞ்சி நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 23ந்தேதி தீர்ப்பு கூறியது. பின்னர், தண்டனை விவரம் கடந்த 6ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர் ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான மற்றொரு வழக்கில் வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ராஞ்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் முதலமைச்சர் பதவியில் லாலு இருந்தபோது, அதாவது 1990ம் ஆண்டில் சாய்பாசா கருவூலத்திலிருந்து ரூ .35.62 கோடி மோசடி செய்யப்பட்டதாக மோசடி வழக்கு நடைபெற்று வந்தது..
இந்த வழக்கையும் ராஞ்சி கோர்ட்டு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் வரும 24ந்தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக சிபிஐ அதிகாரி கூறியுள்ளார்.