காத்மண்டு:

ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி எவரெஸ்ட் மலை சிகரத்தின் மீது ஏறி 4 இந்திய ராணுவ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உலகிலேயே ஆக்சிஜன் உதவியில்லாமல் இந்த சாதனையை படைத்த முதல் குழுவினர் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். குஞ்சோக் டெண்டா, கேல்சங், டோர்ஜிபுத்தியா, கால்டென் பஞ்சூர் மற்றும் சோனாம் புன்ட்சோக் ஆகிய 4 பேர் தான் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.

இது குறித்து ஸ்நோ லயன் எவரெஸ்ட் பயண குழு தலைவர் கால் விஷால் துபே கூறுகையில், ‘‘ ஆக்சிஜன் இல்லாத பயணத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் 4 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து வெற்றி கண்டுள்ளனர்.

இது வரை எந்த பயண குழுவினரும் இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. முதன் முறையாக முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளோம். ஆக்சிஜன் இல்லாமல் ஏறி வரலாறு படைத்துள்ளோம்.’’ என்றார்.

8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் இதுவரை 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஏறியுள்ளனர். கடந்த மாதம் 21ம் தேதி இந்த குழுவினர் காத்மண்டு திரும்பினர்.