ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஹாசீப் திரபு தாக்கல் செய்தார். இதில் முதன் முறையாக 3ம் பாலினத்தவர் (திருநங்கைகள்) தனிப் பிரிவாக அங்கிகரிக்கப்பட்டு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹாசீப் திரபு கூறுகையில், ‘‘மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான சலுகைகளை கேட்டு பெற வேண்டிய நிலை தான் உள்ளது. பெற்றோரை இழந்தவர்கள், திருமணம் ஆகாத பெண்கள், பென்சன் போன்றவற்றை பெற தகுதி பெற்றவர்கள்.

3ம் பாலினத்தவரையும் சமமாக நடத்தும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு மட்டும் என்று இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இதர அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 4.5 லட்சம் தொழிலாளர்கள், 1.5 லட்சம் ஓய்வூதியர்கள் என 30 லட்சம் பேருக்கு இது விரிவுபடுத்தப்பட்டுளளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.