சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் – தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மாண்புமிகு
@Subramanian_Ma அவர்களுக்கு வாழ்த்துகள்! நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.,
Patrikai.com official YouTube Channel