ஸ்டாக்ஹாம்:

உலக நாடுகளின் ராணுவ செலவினம் 2017ம் ஆண்டில் அதிகரித்துள்ளது என்று ஸ்வீடனின் அமைதி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள் அறிக்கையில், ‘‘உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவினம் 2017ம் ஆண்டு 1.73 ட்ரில்லியன் டாலர். இது 2016ம் ஆண்டை விட 1.1 சதவீதம் அதிகம். 61,000 கோடி டாலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் சீனா 22,800 கோடி டாலர் செலவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் சீனா ராணுவத்திற்காக செலவிடும் தொகை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

6,900.4 கோடி டாலர் செலவிட்டு சவுதி அரேபியா 3ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ரஷ்யா 6,600 கோடி டாலர்கள் செலவு செய்துள்ளது. 1998ம் ஆண்டில் இருந்து முதன் முறையாக 20 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டைவிட 5.5 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளது. அடுத்த இடங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

2017-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகள்…

அமெரிக்கா – 61,000 கோடி டாலர்.
சீனா – 22,800 கோடி டாலர்.
சவுதி அரேபியா – 6,900.4 கோடி டாலர்.
ரஷ்யா 6600.3 கோடி டாலர்.
இந்தியா – 6400 கோடி டாலர். இது
பிரான்ஸ் – 5700.8 கோடி டாலர்.
இங்கிலாந்து – 4700.2 கோடி டாலர்.
ஜப்பான் – 4500.4 கோடி டாலர்.
ஜெர்மனி – 4400.3 கோடி டாலர்.
தென் கொரியா – 3900.2 கோடி டாலர்.