சென்னை
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருமாறும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ள நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் .
நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும். அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது”
எனத் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel