மாஸ்கோ

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்றுள்ளார்.  அவர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானிடம் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளார்.   அப்போது அவரிடம் இந்தியாவுடனான உறவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு இம்ரான் கான், “எங்களுக்கு இந்தியா ஒரு எதிரி நாடாக மாறியதால் அவர்களுடனான வர்த்தகம் குறைந்துவிட்டது. எனது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கொள்கை ஆகக் கொண்டுள்ளது.. ஆசியாவில் வரையறுக்கப்பட்ட நாடுகளுடன் மட்டுமே தற்போது வர்த்தகம் செய்யப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக போரில் ஈடுபட்டுள்ளது. இவற்றால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  ஆகையால் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.