இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. மிலிட்டரி குவிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீர் பதற்றம் குறித்து பேசிய இம்ரான்கான், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச அச்சுறுத்தல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியிருந்தார். காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.