டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’  கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆக.21-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கட்சி உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்கள் வாங்கப்பட உள்ளது.

2025 மார்ச் மாதம் நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில், ஏற்பட்ட தீ விபத்தில்  ஏராளமான பணம் மீட்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் டெல்லியில் இருந்து  அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்களை எழுந்த நிலையில்,  நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளதாகவிம்,  இதுதொடர்பாக எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறப்படும் என அமைச்சர்  கிரண் ரிஜிஜு   தெரிவித்தாா்.

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில்  கைப்பற்றப்பட்ட பணம் குறித்து,  விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. இதைத்தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா்.

அதன் பிறகு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகளைத் தொடங்குமாறு, மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினாா். அதன் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய மத்தியஅமைச்சர்  கிரண் ரிஜிஜு, ‘நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மக்களவையில் கொண்டு வருவதா அல்லது மாநிலங்களவையில் கொண்டு வருவதா என மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது. அதன் அடிப்படையில் எம்.பி.க்களிடம் கையொப்பம் பெறும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

நீதித் துறையில் இதுபோன்ற ஊழல் சம்பவம் நடந்துள்ளதால் அனைத்துக் கட்சி எம்.பி.க்களிடமும் கையொப்பம் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா்.

ஏற்கனவே கடந்த 2028ம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி,  காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சிகள்  அப்போதைய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடுவைச் சந்தித்து,  ஆனால், இதை ஏற்க பாஜக அரசு மறுத்து விட்டது. இதனால்,  மேலும் நீதிபதி மிஸ்ரா மீதான இம்பீச்மென்டும், நாடாளுமன்றத்தில் தோற்கும் நிலையே இருந்தது. இதையடுத்து, அவரது பதவி நீக்க தீர்மானம் தோல்வியை அடைந்தது.

ஆனால், தற்போது,  நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் இம்பீச்மென்ட் தீர்மானத்துக்கு பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அவரது பதவி நீக்கம் தீர்மானம் வெற்றி பெறும்வாய்ப்பு உள்ளது.