தென் கொரியாவில் அவசர நிலை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு சட்டங்களை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் நேற்றிரவு திடீரென பிரகடனப்படுத்தினார்.
அதிபர் யூன் சுக் யோல்-ன் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றம் முன் குவிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர நிலையை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது.
ராணுவ சட்டங்களும் திரும்பபெறப்பட்டதை அடுத்து தென் கொரியாவில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கொரிய மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ள நிலையில் கொரிய தொழிற்சங்க கூட்டமைப்பு அதிபர் யூன் சுக் யோல் பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
தவிர, அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் யோல் ராஜினாமா செய்யாத பட்சத்தில் அவர் மீதும் பாதுகாப்பு அமைச்சர் மீதும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
தென் கொரியாவில் திடீர் அவசர நிலை பிரகடனம்… வடகொரிய ஆதரவு தலைவர்கள் நள்ளிரவில் கைது…