புதுடெல்லி:
பொருளாதரத்தில் சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும் என்று ஐ.நா கணித்துள்ளது.

இதுகுறித்து ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021’ எனும் அறிக்கையில், இந்திய பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என்றும், இது சீனாவின் வளர்ச்சியை விட அதிகமான வளர்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம், 2021ம் ஆண்டில், 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், கடந்த 2019ல், 4.7 சதவீத வளர்ச்சி இருந்தாலும், கடந்த, 2020ல், கொரோனாவின் தாக்கத்தினால் வளர்ச்சியானது, 9.6 சதவிகிதம் சுருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.