இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் வருமான வரியை குறைப்பது என அண்மையில் இந்தியா எடுத்த முடிவு, முதலீடுகள் குறித்த சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. qiqndkf இந்தியா தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி நிலைமைகளின் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் பன்னாட்டு நிதியம் அறிவுருத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பன்னாட்டு நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் சாங்யோங் ரீ, “இந்தியாவில் இன்னும்நிதி நெருக்கடிகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்தியா கவனமாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை, முதலீடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த இரண்டு காலாண்டுகளில், மந்த நிலையை எட்டியது. இதை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 7.0 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் முதலீட்டை புதுப்பிப்பதற்கு நிச்சயம் உதவும்” என்று தெரிவித்தார்.