சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பேருந்து போக்குவரத்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.
புயல் காரணமாக இன்று சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மழை சற்று ஓய்ந்துள்ளது.
சென்னையில் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என்றும் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னைக்கு விடப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பபெறப்பட்டுள்ளது.