டெல்லி: இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடரும் கனமழையால் முக்கிய நதிகள் , நீர்த்தேக்கங்கள், அணைகளில் நிரம்பி வருகின்றன.
பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 3 நாட்களில், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும்.
இந்தியாவின் தெற்கு பகுதியில், அடுத்த 3 நாட்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு பரவலாக மழை கொட்டும். செப்டம்பர் 29ம் தேதி ராயலசீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதிக கனமழை பெய்யும்.
வரும் 27ம் தேதி வரை இந்தியாவில் 9 சதவீதம் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மழைப்பொழிவு இயல்பை விட 7% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.