மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாந்தம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கியவர் ஐ.எம்.விஜயன்,

இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார்.

சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற விஜயன், இந்திய கால்பந்தாட்ட அணியின் Player of the year என்ற பட்டத்தை பெற்ற முதல் வீரராகவும் உள்ளார்.

2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் விஜயன் கேரள காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.