பீகார்:
பீகாரில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சீராக் பாஸ்வான் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.
பீகாரின், கயாவில் உள்ள அட்ரீ சட்டமன்ற தொகுதிக்கு நேற்று சென்று பிரச்சாரம் செய்த சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளதாவது: இந்த நேரத்தில் என் தந்தை என்னுடன் இல்லாததை நான் பேரிழப்பாக கருதுகிறேன், இன்று நான் தனியாக போட்டியிட தயாராகி விட்டேன், ஆனால் உங்கள் அனைவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள என்னால் முடிந்த வரை நான் முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நான் என்னால் முடிந்த வரை பல இடங்களை அடைய முயற்சி செய்வதால், சாலை வழியே பயணம் செய்கிறேன், அப்போதுதான் என்னால் முடிந்தவரை மக்கள் பலரை சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன், என்னால் முடிந்த வரை நான் மக்களை சந்தித்தும் வருகிறேன், மக்கள் பலர் எல்ஜேபிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் இதுவரை எனக்கு உற்சாகத்தைக் கொடுத்து வந்துள்ளனர், ஆகையால், மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
‘பீகார் முதல் பிகாரி முதல்’ என்ற தனது கொள்கையை சிராக் பாஸ்வான் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் கட்சி உறுப்பினர்கள் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீராக் பாஸ்வானின் தந்தையும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் இம்மாத துவக்கத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.