பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி தொடர்பான புகாரின் பேரில், அதை நடத்தி வந்த, நில பெண் உரிமையாளர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள A.வாடிப்பட்டி பகுதியில் லதா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் கனிமவளத்துறை அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு இயக்க அனுமதி வழங்கி உள்ளனர்.
இநத் நிலையில், தற்போது சிலர், இது குறித்து பெரியகுளம் காவல்துறை மற்றும் கனமவளத்துறை, முதல்வர் அலுவலகம் என பலருக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் ஜெயமங்கலம் காவல் ஆய்வாளர் உட்பட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது,
கனிமவளத்துறையின் எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, கல்குவாரியில் வேலை பார்த்த 4 நபர்கள் மற்றும் நில உரிமையாளர் லதா உட்பட 7 நபர்களை ஜெயமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கு பாறைகளை உடைக்க பயன்படுத்திய செல்லட்டின் குச்சி 20, களி 60 மற்றும் வெடி மருந்து15 கிலோ உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பெரியகுளம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் அனுமதி இன்றி முறைகேடாக செயல்பட்ட குவாரியை ஆய்வு மேற்கொண்டனர். வேறு எங்கும் சட்டோரவிரோதமாக கல்குவாரிகள் நடத்தி வருகிறார்களா? என்ற கோணத்தில் ஜெயமங்கலம் காவல்துறையினர் சாரணை நடத்தி வருகின்றனர்.