சென்னை:
சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மாறன் சகோதர்கள்ன கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தங்களுக்கு விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், சிபிஐ நீதிமன்றத்தில் கண்டிப் பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு சென்னை 14வது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர். வசந்தி முன்பு விசாரணைக்கு வந்து. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட 7 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிபதி ஆர்.வசந்தி விசாரணையை தொடங்கியதும், மாறன் சகோதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர், ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக உள்ள குற்றச்சாட்டுகளையும், அதற்கான ஆவணங்களை யும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
நேற்று இதை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் தெளிவுபடுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, ஆவணங்களை கவனிப்பதாகக் கூறிய நீதிபதி, வழக்கு விசா ரணையை சிறிது நேரம் ஒத்திவைத்ததோடு, அப்போது மாறன் சகோதரர்கள் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]