’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலகம் முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பியவர் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் இருந்து கொண்டே இளையராஜா இசையமைத்த பாடல்கள், திருவாசகம் உள்ளிட்டவற்றைத் தனது குடும்பத்தினருடன் மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றினார் லிடியன்.
இதனை கண்ட இளையராஜா லிடியனைப் பாராட்டியுள்ளார்.
https://www.instagram.com/p/B_xMoIMgSJn/
இது தொடர்பாக லிடியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவுக்காக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா வீடியோ கால் செய்து பாராட்டினார். இது உண்மையிலேயே எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீர்வாதம்” என்று தெரிவித்துள்ளார்.