புதுடெல்லி:
நாயைப் பராமரிக்கும் வேலைக்கு பி.டெக் உள்ளிட்ட டிகிரி படிப்புகள் கட்டாயம் என்று டெல்லி ஐ.ஐ.டி வெளியிட்ட வேலை அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம், கல்விசாரா பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாயைப் பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாத ஊதியமாக 45,000 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி ஐ.ஐ.டியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கல்வி நிறுவனமாக இருந்துகொண்டு, நாயைப் பராமரிக்கும் பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது அவர்களின் கல்வியை ஏளனப்படுத்துவதாகும் என்று நெட்டிசன்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.