போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில்,  இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங்  போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் சரணடைந்தனர். ஆனால், இந்த கொள்ளைக்கூட்டங்கள் அழிக்கப்பட்டு அமைதியான சூழலில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், கொள்ளைக்காரத் தலைவர் ஹனுமான் கும்பலின் உறுப்பினர்  என்ற பெயரில் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதிக்கு 5 பில்லியன் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று  கடிதம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது, அனுப்புநர் தன்னை மோசமான கொள்ளைக்காரத் தலைவர் ஹனுமான் கும்பலின் உறுப்பினர் என்று வெட்கமின்றி அடையாளம் காட்டி  உள்ளார். இந்த அச்சுறுத்தல் கடிதமானது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இருந்து ஒரு துரித அஞ்சல்  வழியாக அனுப்பப்பட்டடு உள்ளது தெரிய வந்துள்ளத.

இந்த கடிதமானத, மத்திய பிரதேச மாநிலம்,   தியோத்தரின் முதல்பெண்  சிவில் நீதிபதி மோகினி படோரியாவின் நீதிமன்றத்திற்கு வந்தது.  இந்த கடிதம், நீதிபதியை அச்சுறுத்தி உள்ளது.   “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும்”  அதுவும் 5 பில்லியன் (ரூ.500 கோடி) என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்டுள்ள பணம்,  உத்தரபிரதேசத்தில் உள்ள பட்காட் வனத்திற்கு செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 7:45 மணிக்குள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், தங்களது கோரிக்கையை புறக்கணித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இந்த அச்சுறுத்தலால் அதிர்ச்சியடைந்த நீதிபதி படோரியா உடனடியாக புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு விவேக் சிங் உடனடியாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு விவேக் சிங் , “ஒரு நீதிபதிக்கு அச்சுறுத்தல் மற்றும் 5 பில்லியன் ரூபாய் கோரிக்கை அடங்கிய பதிவு செய்யப்பட்ட கடிதம்  கிடைத்துள்ளது. கடிதத்தின் அடிப்படையில், நாங்கள் விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம்;  அவரின் கோரிக்கை நிராக்கப்பட்டு இருப்பதாக கூறியவர, இதுகுறித்த விசாரிக்க ஒரு குழுவும் உ. பி. க்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விரைவில் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது “என்று தெரிவித்தார். மேலும்இ,  ரேவாவில் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் வட்டாரங்களின்படி, இந்த கடிதம் பிரயாக்ராஜில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் “ஹனுமான் கும்பலுக்கு” விசுவாசமாக இருப்பதாகக் கூறும் ஒருவரின் கையொப்பத்தைக் கொண்டிருந்தது-இது ஒரு காலத்தில் மத்திய இந்தியாவில் கொள்ளைக்கார பயங்கரவாதத்திற்கு ஒத்ததாக இருந்தது.

பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சந்தேக நபரை புலனாய்வாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர், அவரைப் பிடிக்க மாநில எல்லைகளில் ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.