டில்லி,
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்களை வைத்திருந்தால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த நவம்பர் 8ந்தேதி, மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மேலும், செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற டிசம்பர் 30 வரை அவகாசம் கொடுத்துள் ளது.
ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமாக பழைய மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்து இருந்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, ரூ. 50 ஆயிரம் வரை அபராதம், தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் இன்று பிறப்பிக்கப்படும் என்று டெல்லி தகவல்கள் கூறுகிறது.
அந்த சட்டத்தில், தனிநபர் ஒருவர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளா அதிகபட்சமாக 10 எண்ணிக்கையில் மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருப்பு என்ன வைத்து இருக்கிறார்களோ அந்த தொகையின் 5 மடங்கு தொகையை அபராதமாக விதிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என ஷரத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.