டிரம்ப் உக்ரைன் ஆதரவை கைவிட்டால், அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கக்கூடிய கடுமையான எதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இதனால் அமெரிக்கா இதுவரை சந்திக்காத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் பேச அமெரிக்க, உக்ரைன் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை மியாமியில் மீண்டும் சந்தித்தனர்.
வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவிற்கான டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்கொஃப், மேலும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையை அடுத்து டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு ஆதரவு நிறுத்திவிட்டு, ஐரோப்பாவின் பாதுகாப்பை ஆபத்தில் விடுவார் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க பொருளாதாரத்தின் மீது அணு குண்டு தாக்குதல் நடத்த ஐரோப்பிய நாடுகள் யோசித்து வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஒப்பந்தம் ஏற்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு, NATO நாடுகளின் பாதுகாப்பை விட புடினுடனான உடன்படிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளதாகவும் அதை அமெரிக்கா விரைந்து மேற்கொள்ளக்கூடும் என்று அச்சத்தை அவர்களிடையே ஏற்படுத்தியுளளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஒரு ஐரோப்பிய உளவுத்துறை, அமெரிக்கா–ரஷ்யா இடையே ரகசியமாக நடக்கும் “வணிக, பொருளாதார திட்டங்கள்” குறித்த அறிக்கைகளை பகிர்ந்துள்ளது.
இது, அமெரிக்க நலனுக்காக ஐரோப்பாவின் பாதுகாப்பை டிரம்ப் பலிகொடுப்பார் என்ற அச்சத்தை ஐரோப்பிய அதிகாரிகளிடையே மேலும் அதிகரித்துள்ளது.
டிரம்ப் உக்ரைன் ஆதரவை கைவிட்டால், அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கக்கூடிய கடுமையான பதிலடி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
அதன்படி, ஐரோப்பா வைத்துள்ள டிரில்லியன் கணக்கான அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களை ஒட்டுமொத்தமாக ஒரே தடவையில் விற்றுவிடுவது.
அப்படிச் செய்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு தாறுமாறாக குறையும், வங்கித்துறையில் பண பற்றாக்குறை (liquidity crisis) வரும், கடன் வட்டி விகிதங்கள் திடீரென உயர்ந்து விடும்.
2008 நெருக்கடிக்யை விட மிக மோசமான புதிய நிதி மந்தநிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு முன்னணி ஐரோப்பிய பொருளாதார நிபுணர் இதை “அமெரிக்கா இதுவரை சந்திக்காத மிக மோசமான பொருளாதார அதிர்ச்சி” என WSJ-க்கு கூறியுள்ளார்.
இதன் அரசியல் விளைவும் டிரம்ப் மற்றும் ரிபப்ளிக்கன்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம், குறிப்பாக அடுத்த ஆண்டு நடக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக.
ஐரோப்பிய ஒன்றியமும், UKயும் அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு கடன் வைத்திருப்பவர்கள் என்பதால் மிகுந்த அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தி அவர்களிடம் உள்ளது.
2024 டிசம்பர் நிலவரப்படி, பிரிட்டனிடம் $722.7 பில்லியன் அமெரிக்கக் கடன் பத்திரங்கள் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் $1.62 டிரில்லியன் உள்ளது.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் மொத்தமாக சுமார் $2.34 டிரில்லியன் அமெரிக்க கடன் பத்திரங்கள் உள்ளன.
அதனால், US-க்கு வெளிநாட்டில் இருந்து வரும் மிகப்பெரிய பொருளாதார அழுத்தம் கொடுக்கக்கூடிய குழுவாக EU/UK இருக்கிறது.