
அமராவதி
பிரதமர் மோடி ஆந்திராவுக்கு வந்தால் தமிழகத்தை விட கடுமையாக எதிர்ப்போம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் கூட்டணியை முறித்துக் கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் அமராவதி நகரின் மங்களகிரி பகுதியில் அமைந்துள்ள தொழில் நுடப மையத்த நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். அப்போது அவர், ”நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது தொடர் நடக்கவில்லை என உண்ணாவிரதம் மேற்கொண்டது ஏமாற்று வித்தை ஆகும்.
பிரதமரின் வருகைக்கு எதிராக சென்னையில் கடும் போராட்டங்கள் நடைபெற்றது சரியே. ஆந்திராவுக்கு அவ்ர் வந்தால் அதை விட கடுமையாக நாங்கள் எதிர்ப்போம். இங்கு வரும் துணிச்சல் பிரதமருக்கு கிடையாது என நான் நினைக்கிறேன். முன்பு ஒரு காலத்தில் பிரதமருக்கு எதிராக பேச பலர் பயந்தனர். ஆனால் அவருடைய அக்கிரமங்களை எதிர்க்க இப்போது மக்கள் துணிந்து விட்டனர். மோடி அரசை பல்வெறு கட்சிகளும் எதிர்த்து போராடி வருகின்றன” என உரை ஆற்றி உள்ளார்.
[youtube-feed feed=1]