கொல்கத்தா: துர்கா பூஜை கிடையாது என்ற புரளியை நிரூபித்தால், 101 தோப்புக்கரணம் போட தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் வரும் அக்டோபர் 22 முதல் 26ம் தேதி வரை துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட்டங்களை மேற்கு வங்க அரசு ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில், துர்கா பூஜை கிடையாது என்ற புரளியை நிரூபித்தால், 101 தோப்பு கரணம் போட தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:
ஒரு அரசியல் கட்சி ஒன்று தேவையில்லாத புரளி ஒன்றை கிளப்பி வருகிறது. துர்கா பூஜை ரத்து என்று நாங்கள் கூறியிருப்பதை நிரூபித்தால், மக்கள் முன்பு 101 தோப்புக்கரணம் போட தான் தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார்.